தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை பலர் பயன்படுத்துவோம். ஆனால் எந்த ஷாம்பூவை பயன்படுத்தினாலும், அதுகுறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோன்று ஒரே தன்மை கொண்ட ஷாம்பூதான், ஆனால் பிராண்டு வேறு. அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்கிற முடிவு ஆபத்தாக அமையும். எனினும் வாங்குவதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்துவிட்டு ஒரு பிராண்டை மட்டும் முடிவு செய்து வாங்கலாம். இருந்தாலும் ஷாம்பூவை அவ்வப்போது மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் முடி உதிர்வை தடுக்காது.
வெளியில் அதிகம் அலைந்து திரிபவராக இருந்தால், தினசரி ஷாம்பூ பயன்படுத்தலாம். மேலும் அனைத்து பகுதிகளிலும் மாசுபாடு அதிகமாக நிலவுவதால் தூசி, துகள் தலை முடியில் ஏற்படும். தினமும் வெளியில் அலைபவர்கள், சூரியன் வெப்பத்துக்கு வெளிப்பட நேரிடும். தலையில் வியர்வை அதிகளவில் சுரக்கும். இதனால் சளி உள்ளிட்ட தொல்லைகள் வரும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் அதிகரிப்பதால் கவலையா? அதற்கான வீட்டு வைத்தியம்
எனவே தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்வது நன்மையாகவே அமையும். ஈரப்பதமில்லாத பகுதிகளில் வாழ்பவர்களும் தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளிக்கலாம். ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில்தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை உள்ளிட்டவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் வெங்காயம் சாப்பிடலாமா? உங்களுக்கு ஏற்ற காய்கறிகள் என்ன?
எப்போதுமே முடியின் வேரில் எண்ணெய் பசை இருக்கும். அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை. முடியின் இடையில் விரல்களை விட்டு, உள்ளங்கையை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். மேலும் கூந்தலின் வேரை நன்றாக தேய்த்து கழுவிட வேண்டும். நகங்களை வைத்து உச்சந்தலையை கழுவுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மிகவும் ஈரப்பதமாக உச்சந்தலையை வைத்திருக்கக் கூடாது. முடியின் முனைகள் மிகவும் உலர்ந்து போவதை தவிர்க்க கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கைகளில் இந்த அறிகுறிகள் தோன்றும்: கவனம் தேவை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ