ஊரடங்கு விதிமுறையிலிருந்து கணவனை காப்பாற்ற 'நாய்' என கூறி ஆனவரை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஊரடங்கு விதிமுறையிலிருந்து கணவனை காப்பாற்ற 'நாய்' என கூறி ஆனவரை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி (Viral) வருகிறது.
கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா தொற்றை (Coronavirus) கட்டுப்பாட்டில் வைக்க நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளிவர தடை (Lockdown) விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு சில விதி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்கள் பயணம் மேற்கொள்ளவும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லவும் இந்த ஊரடங்கு நேரத்தில் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | சேலை கட்டி stunt காட்டும் நடிகையின் வீடியோ viral
Wife walked her husband on a leash and claimed that she was 'walking her dog'. She told the cops that walking pets was allowed during the curfew hours in Canada. https://t.co/njaKoyTwYd
— Khushboo (@Khush_boozing) January 12, 2021
இந்நிலையில், ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் ஊரடங்கு நேரத்தில் வாக்கிங் சென்றுள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் செல்லமாக வீட்டில் வளர்க்கும் நாயை (Dog) போலவே அவரது கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதற்கு அவர் கூறிய பதில் இன்னும் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் சாலையில் வாக்கிங் செல்லலாம். அதை தான் நானும் செய்கிறேன் என அந்த பெண் கூறியுள்ளார்.
அரசின் அறிவிப்பை மீறியமைக்காக தம்பதியர் இருவர் மீதும் விதிமுறை மீறலுக்கான வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு அபாராதத் தொகையாக இந்திய மதிப்பில் 3.44 லட்சம் விதிக்கபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR