Aadhaar எச்சரிக்கை: உங்கள் ஆதார் அட்டை போலியா? அசலா? எப்படி சரிபார்ப்பது? வழிமுறை இதோ

ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆப்லைனிலும் வெரிஃபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்ய பயனர்கள், resident.uidai.gov.in/verify என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 04:04 PM IST
  • இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு இன்றியமையாத ஆவணமாகிவிட்டது.
  • ஆதார் அட்டையை நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன.
  • ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஆதார் அட்டையில் இரண்டு முறை மட்டுமே தனது பெயரை புதுப்பிக்க முடியும்.
Aadhaar எச்சரிக்கை: உங்கள் ஆதார் அட்டை போலியா? அசலா? எப்படி சரிபார்ப்பது? வழிமுறை இதோ title=

Aadhaar Card Latest News: UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு  இன்றியமையாத ஆவணமாகிவிட்டது. 

சமீப காலங்களில் ஆதார் அட்டையை (Aadhaar Card) நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொது மக்களுக்கு UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்கும் முன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

UIDAI தகவல் கொடுத்தது

சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்த UIDAI, அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண் இல்லை என்று UIDAI எழுதியுள்ளது. ஒரு நபரின் ஆதார் எண் சரியான எண்ணா இல்லையா என்பதை UIDAI இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று UIDAI கூறியுள்ளது. இது தவிர, mAadhaar செயலியின் மூலமும் இதை தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Aadhaar Card: முகவரியை மாற்றுவது மிகவும் எளிது; ஆவணம் எதுவும் தேவையில்லை

எப்படி சரிபார்ப்பது

ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆப்லைனிலும் வெரிஃபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்ய பயனர்கள், resident.uidai.gov.in/verify என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும். 

அதன் பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும். பிறகு பாதுகாப்பு குறியீடு மற்றும் கேப்ட்சாவை நிரப்பி, 'Proceed To Verify' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு, 12 இலக்க எண்ணின் சரிபார்ப்பு (Number Verification) திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் அசல் ஆதார் எண்.

புதுப்பித்தல் பற்றி இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

UIDAI அலுவலக குறிப்பின் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஆதார் (Aadhaar) அட்டையில் இரண்டு முறை மட்டுமே தனது பெயரை புதுப்பிக்க முடியும். இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பிறந்த தேதி மற்றும் பாலினத்தை புதுப்பிக்க முடியும்.

ALSO READ: Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News