7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வின் முக்கிய அப்டேட்: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி பரிசாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக நேற்று (புதன்கிழமை) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி, 2023 முதலே அமலுக்கு வரும். இந்த உயர்வுக்குப் பிறகு, இனி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42-ல் இருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்:
இந்நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வால் (Dearness Allowances) சுமார் 16 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் (Tamil Nadu announces 4% DA Hike) பயனடைவார்கள். அதே நேரத்தில், இந்த அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஓய்வூதியர்தாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதனிடையே நவீன் பட்நாயக் தலைமையிலான ஒரிசா அரசும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowances / DA) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief / DR) ஆகியவற்றில் 4 சதவீதம் அதிகரிப்பை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது:
மத்திய மாநில அரசை தொடர்ந்து சமீபத்தில் ரயில்வே வாரியமும் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowances / DA) 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். ரயில்வே வாரியம் அகவிலைப்படியை 42ல் இருந்து 46 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி, 2023 முதலே பொருந்தும். ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் தற்போது வரையிலான நிலுவைத் தொகையும், அடுத்த மாத சம்பளத்தில் அகவிலைப்படியும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸையும் அறிவித்தது. எனவே தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த அறிவிப்புகள் வெளியானதால் தற்போது ரயில்வே ஊழியர் சங்கங்கள் இந்த முடிவை திருப்தியுடன் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், "ஜூலை மாதம் முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி பெறுவது ஊழியர்களின் உரிமை. தீபாவளிக்கு முன் அதற்கான தொகையை அறிவிக்கும் முடிவை வரவேற்கிறேன். இந்திய ரயில்வேயின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம் ராகவய்யா, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்றும், அதன் நோக்கம் பணவீக்கத்தை பாதிக்காது என்றும் கூறினார்.
மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. DA ஹைக் பரிசு கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ