ஐதராபாதிலிருந்து புறப்பட்ட IndiGo நிறுவனத்தின் 6E 334 விமானம் எந்திர கோளாரு காரணமாக மீண்டும் ஐதராபாத் விமான நிலையம் திரும்பியது!
IndiGo நிறுவனத்தின் 6E 334 விமானம் (ஐதராபாத் - ராய்பூர்) இந்திர கோளாரு காரணமாக புறப்பட்ட சிறுத நேரத்திலேயே மீண்டும் ஐதராபாத் திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Indigo flight 6E 334(Hyderabad-Raipur) returned to Hyderabad after take off due to a technical problem in the engine pic.twitter.com/iDeU7xsUci
— ANI (@ANI) March 14, 2018
முன்னதாக நேற்று நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA , தவறுதலான பிராட் & விட்னி இயந்திரங்களுடன் வெளிவந்த A320Neo விமானங்களை தரையிரக்கியதினை அடுத்து IndiGo நிறுவனம் தனது 47 விமானங்களின் சேவையினை ரத்து செய்தது.
மார்ச் 13 நாளான நேற்று இதுகுறித்து IndiGo நிறுவனம் தனது 47 உள்ளூர் விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பாட்ன, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், கௌகாத்தி உள்பட அண்டை நகரங்களுக்கு செல்லும் விமான சேவையினை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை அகமதாபாத்திற்கு சென்ற விமானம் ஆனது பழது காரணமாக கிளம்பி 40 நிமிடங்களில் நடுவானில் இருந்து லக்னோ-வில் தரையிரக்கப்பட்டது.
பாதுகாப்பு நலன் கருதி ESN 450 க்கு அப்பால் PW1100 இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட A320 Neos விமானங்களை உடனடியாக தரையிரக்க வேண்டும் என நேற்று விமான சேவை பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்ததே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதேப் போன்ற என்ஜின் கோளாரு காரணமாக மட்டும் 3 விமானங்கள் திடீரென தரையிரக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1000 விமானங்களை கொண்டு தினமும் விமான சேவைகளை வழங்கி வரும் IndiGo நிறுவனத்தின் 11 விமானங்களின் சேவையானது நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேவைலியில் இன்று மட்டும் சுமார் 51 விமானங்கள் (AirGo, IndiGo) ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!