தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் தற்போது முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஆதார் திட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்களின் வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘ஆதார் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின்’ தலைவர் அஜய் பூஷண் பாண்டே எழுத்துபூர்வமாக அளித்த பதில்களை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாசித்தார்.
அந்த கடிதத்தில் குருப்பிட்டுள்ளது....!
“குழந்தையாக இருந்தபோது ஆதார் எண் பெற்ற ஒருவர், 18 வயதை அடைந்த பிறகு ‘ஆதார்’ திட்டத்தில் இருந்து வெளியேற முடியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு ஆதார் ஆணைய தலைவர் பாண்டே கூறிய பதில்; “ஆதார் சட்டப்படி, அப்படி வெளியேற அனுமதி கிடையாது” என்று பதில் அளித்தாது.