புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம் புத்த நகர் ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (NIA) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான பராமரிப்பு மையமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம் காரணமாக டெல்லி-NCR, மேற்கு உத்திர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றார். நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் கட்டமைப்பு, பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வைக்கு ஏற்ப, எதிர்காலத்துக்கு ஏற்ற விமானப் போக்குவரத்து தேவையை மனதில் கொண்டதாக இருக்கும்.
இன்று பிரதமர் மோடி (PM Modi) திறந்து வைத்த ஜேவார் விமானம் 6 ஓடு பாதைகளுடன் இந்தியாவின் நம்பர் 1 விமான நிலையம் என்கிற பெருமையை பெறும். இது வரை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தான் 3 ஓடு பாதைகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் நோய்டா விமான நிலையம் 6 ஓடுபாதைகளுடன் உலகின் 3 வது விமான நிலையம் என்கிற பெருமையையும் பெறும்.
ALSO READ | பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை: போர் விமானத்தில் வந்திறங்கி திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
வரும் 2024-ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் இந்த விமான நிலையம் ரூ.34 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கும். விமான நிலையத்தின் மேம்பாடு, பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இணைப்பை அதிகரிப்பது மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் விமானப் போக்குவரத்துத் துறையை உருவாக்குவது.
இந்த விமான நிலையம் 1300 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் (Uttar Pradesh) 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை, குஷிநகரில் அக்டோபர் 20ம் தேதி பிரதமர் திறந்து வைத்தார். அதே நேரத்தில் அயோத்தியில் விமான நிலையத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதுவும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR