BJP கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதுதான் இந்த தேர்தல் முடிவு என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்றுகாலை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல்கள் முடிவு தொடர்பாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், BJP கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர். எனவே, மக்கள் அனைவரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். பா.ஜ.க-விற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எங்களுடன் உள்ளனர். பா.ஜ.க-விற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வழிவகை செய்யும்,” என்று கூறியுள்ளார்.
மேலும், தெலுங்கானாவில் வெற்றி பெற்ற சந்திரசேகர ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.