தெலங்கானா வனத்துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்டா சுரேகா சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அக்கருத்தை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொண்டா சுரேகா பேசியது என்ன?
தெலுங்கு சினிமா துறையில் பல பெண்கள் முன்கூட்டியே திருமணம் செய்து கொள்வதற்கு தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகன் கேடி ராமாராவ் தான் காரணம். அவர் திருமணம் செய்த நடிகைகளைக் கூட விடுவதில்லை. சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கும் அவர் தான் காரணம். சமந்தாவை வீட்டுக்கு அழைத்தார். அதனை நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனாவும் ஒப்புக்கொண்டார். ஆனால், சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தான் நாகசைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என கூறினார். வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்து தெலங்கானாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
சுரேகாவுக்கு கடும் எதிர்ப்பு
கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நாகார்ஜூனா, அவரின் மனைவி அமலா, நாகசைதன்யா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அவர் உடனடியாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாகார்ஜூனா மனைவி அமலா கேட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தெலங்கானா முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமந்தாவும் சுரேகா கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
கொண்டா சுரேகா பகிரங்க மன்னிப்பு
அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கேடி ராமாராவ் வலியுறுத்தினார். மேலும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவில், ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதாகவே இருந்தது. உங்களை காயப்படுத்துவதற்காக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய கருத்தால் நீங்களும் உங்கள் ரசிகர்களும் புண்பட்டிருந்தால் எந்த நிபந்தனையுமின்றி வாபஸ் பெறுகிறேன், வேறு எதுவும் நினைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும், கொண்டா சுரேகாவின் இக்கருத்து தெலங்கானா அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
மேலும் படிக்க | திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ