Congress CAA Announcement: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவித்திருந்தது. அந்த வகையில், முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ஆம் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவுகள் பாக்கி உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 4இல் தேர்தல் முடிவும் வெளியாகும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 26ஆம் தேதி நடைபெறுகிறது. 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் அன்று தேர்தல் நடத்தப்படுகிறது. குறிப்பாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகரா, கேரளா உள்ளிட் மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளாவில் தீவிர பரப்புரை
அந்த வகையில், கேரளாவில் தற்போது முழு வீச்சில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. ஆளும் சிபிஎம் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பரப்புரையில் முன்னணியில் இருக்கும் நிலையில், பாஜகவும் கேரளாவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், கேரளாவை பொருத்தவரை இரு கட்சிகளும் எதிர் துருவங்கள்தான்.
பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் திட்டித் தீர்த்து வருவதை தேர்தல் பரப்புரை தோறும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், சமீபத்தில் பினராயி விஜயன் காங்கிரஸ் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கடுமையாக சாடியிருந்தார்.
ப. சிதம்பரம் பேட்டி
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ப.சிதம்பரம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சட்டங்கள் குறித்து பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் 5 சட்டங்கள் முழுமையாக நீக்கப்படும்.
சிஏஏ ரத்து செய்யப்படும்
நான் சொல்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள், நான்தான் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் அறிக்கை. அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நான் எழுதியதுதான். எனக்கு தெரியும் அதன் நோக்கம் என்னவென்று. சிஏஏ முழுமையாக ரத்து செய்யப்படும், சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படாது. நாங்கள் தெளிவாக கூறுகிறோம். இந்தியா கூட்டணி தலைமையில் மத்தியில் ஆட்சியமைந்தால் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே சிஏஏ ரத்து செய்யப்படும்" என்றார். மேலும் பினராயி விஜயன் காங்கிரஸ் சிஏஏவை எதிர்க்கவில்லை என்ற கூறியதையும் மறுத்தார். திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் மக்களவையில் சிஏஏவை எதிர்த்து பேசியதாக கூறினார்.
மேலும் கேரளாவில் காங்கிரஸ் - சிபிஎம் இடையிலான மோதல் குறித்தும், தேசிய அரசியல் நிலவரம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டதற்கு"தேசிய பார்வையில், பாஜகவுக்கு எதிராக மோதி, மத்தியில் ஆட்சி அமைக்கும் வல்லமை யாரிடம் உள்ளது? இந்தியா முழுவதும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் அளவில் எது இருக்கிறது?, காங்கிரஸ் தானே... சிபிஎம் இல்லை அல்லவா... சிபிஎம் இப்போது ஒற்றை மாநில கட்சிதான்" என்றார்.
மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ