RBI Update About ₹ 2000 Exchange: ரூ. 2000 நோட்டை வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளவோ அக்டோபர் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 96% க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டு உள்ளன. அதன் மதிப்பு ₹3.43 லட்சம் கோடி ஆகும். இதில் 87% நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகள் வேறு நோட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும், அவை இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நீட்டிப்பு
முன்னதாக, நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி ஆக இருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அதன் கடைசி தேதியை அக்டோபர் 7, 2023 வரை நீட்டித்தது.
#WATCH | RBI Governor Shaktikanta Das says, "...We have announced the withdrawal of Rs 2,000 notes. So far, we have got back about 3.43 lakh crore and about 12,000 crore are left. 87 per cent of it has come as bank deposits..." pic.twitter.com/ODzErdysb2
— ANI (@ANI) October 6, 2023
ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ரூ. 2000 நோட்டுகள் மாற்றப்படும்
வங்கியில் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிந்த பிறகு, இந்த 2000 நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும். ஆனால் ஏதோ ஒரு வங்கிக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியாது. அதாவது ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். அதேநேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க விரும்பினால், ரிசா்வ் வங்கியின் அலுவலகங்களில் மூலம் எவ்வளவு ரூபாய் 2000 நோட்டுகளை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் மற்ற வங்கிகளில் வைப்போ அல்லது வேறு ரூபாய் நோட்டாக மாற்றிக்கொள்ளவோ முடியாது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2000 நோட்டு எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது?
2000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016 முதல் சந்தையில் புழக்கத்திற்கு வந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், 2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. அதேசமயம் 2021-22ல் ரூ.38 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் அழிக்கப்பட்டன.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏதேனும் ஆவணம் தேவையா?
இல்லை, இந்த ₹ 20,000 நோட்டுகளை வங்கிக்குச் சென்று எந்த ஆவணமும் இல்லாமல் எளிதாக மாற்றலாம். நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் ஏற்படாத வகையில் வங்கிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வங்கியில் நோட்டுகளை மாற்ற எந்த விதமான ஆவணங்களையும் கொடுக்க வேண்டியதில்லை.
ரூ. 20,000 வரை வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்
ஒரு நேரத்தில் ₹ 20,000 வரை ₹ 2000 நோட்டுகளை மாற்றலாம். அதாவது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். உங்களிடம் வங்கிக் கணக்கு இருந்தால், 2000 ரூபாய் நோட்டுகளை கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
வங்கிக்கணக்கு இல்லையென்றால் வங்கியில் ₹ 2000 நோட்டுகளை மாற்ற முடியுமா?
மாற்றிக்கொள்ளலாம்., வங்கியில் கணக்கு இல்லாதவர்களும் ஒரே நேரத்தில் எந்த வங்கிக் கிளையிலும் ₹20,000 வரை வேறு ரூபாய் நோட்டுகளாக ₹2000 நோட்டை மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் வங்கிக் கணக்கு இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இந்த வரம்பு பொருந்தாது.
யாரெல்லாம் 2000 நோட்டுகளை மாற்ற வேண்டும்?
இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும். 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது வேறு நோட்டுகளுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க - ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்க மறுத்த திரையரங்கம் ..! இளைஞர்கள் வாக்குவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ