விசாகப்பட்டினம்: சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து

ஆந்திராவில் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2018, 09:14 AM IST
விசாகப்பட்டினம்: சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து title=

ஆந்திராவில் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...! 

ஆந்திரா பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் அதிகாலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கஜுவாகா பகுதியில் உள்ள ஸ்ரீ கன்யா என்ற சினிமா தியேட்டரில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் எதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் என விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து பொருள் சேதம் மற்றும் உயிர்பலி பற்றிய எந்தத்தகவலும் தெரியவில்லை. மேலும், தகவலுக்கு காத்திருக்கின்றனர். 

 

Trending News