வாயு புயல் குஜராத்தை தாக்காது; கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

இன்று பிற்பகல் குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்; இதுவரை 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்!!

Last Updated : Jun 13, 2019, 09:28 AM IST
வாயு புயல் குஜராத்தை தாக்காது; கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை title=

 

அரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்று குஜராத் கடற்கரை பகுதியையொட்டி நகர்ந்து வருகிறது. இந்த புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது எனவும், போர்பந்தர் - துவாரகா உள்ளிட்ட கடற்கரை பகுதியையொட்டி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், புயல் கரையை கடக்கும் போது குஜராத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று பிற்பகல் குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்; இதுவரை 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்!!

அரபிக்கடலில் உருவான வாயு புயல், நேற்று அதி தீவிர புயலாக மாறியது. குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் நெருங்கி வருவதை அடுத்து குஜராத் மாநிலத்தில் கட்ச், மோர்பி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு 700 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், முப்படைகளின் மீட்பு குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்ச், ஜாம்நகர், ஜுனாகத், போர்பந்தர், ராஜ்கோட் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.போர்பந்தர், டையூ, பாவ் நகர், காசாட், கண்டலா ஆகிய 5 விமான நிலையங்கள் இன்று நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் வாயு புயல் கரையை கடக்கவிருப்பதால், அரசிடமிருந்து அவ்வப்போது வெளியாகும் அறிவுறுத்தல்களின்படி மக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

வாயு புயல் காரணமாக மும்பை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கடற்படையினர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Trending News