மும்பை: மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் ஒன்ரான புனே நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கை அனைவருக்கும் ஆச்சரியத்தை எழுப்பியிருக்கிறது.
புனே நகருக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் தாயார் ஜிஜா பாய் நினைவாக 'ஜிஜாவ் நகர்' என்று பெயர் மாற்ற வேண்டும் என முதல்வர் உத்தவ் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தது.
மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிப்பதால், உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புனே நகரின் பெயரை ஜிஜாவ் நகர் என மாற்ற காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
மேலும் படிக்க | மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு (NMIA) உள்ளூர் தலைவர் DB பாட்டீலின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநிலத்தில் அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கை நவி மும்பை விமான நிலையத்திற்கு பாலாசாகேப் தாக்கரேயின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்ற நிலையில் காங்கிரஸின் கோரிக்கைகளின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிலர் வெளிநடப்பு செய்தனர். இரண்டு கேபினட் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வர்ஷா கெய்க்வாட் மற்றும் அஸ்லாம் ஷேக் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.
மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முக்கிய முடிவுகள்
அவுரங்காபாத்தை "சம்பாஜிநகர்" என்று பெயர் மாற்றம் செய்வது போன்ற சில முக்கிய முடிவுகளும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR