மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கர்நாடகா மாநில முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act- CAA) எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமிற்குப் பிறகு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரஜ்னீஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மங்களூருவில் "போலி செய்திகள் பரவும் வாய்ப்பு" இருப்பதால் இணைய சேவைகள் தடை செய்யப்படுவதாகவும், அமைதியை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கை இது என்றும் அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை அன்று, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மங்களூருவின் பல்வேறு பகுதிகளில் 6,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், போரட்டக்காரார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை பயன்படுத்தினர்.
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
Karnataka Chief Minister B S Yediyurappa has announced Rs 10 lakh each as compensation to the families of the two people who died during protests in Mangaluru on December 19. #CitizenshipAmendmentAct (file pic) pic.twitter.com/mpsXvcqKgX
— ANI (@ANI) December 22, 2019