அமுல் (AMUL) என்பது குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் நிர்வகிக்கும் ஒரு இந்திய பால் கூட்டுறவு சங்கமாகும்.
அமெரிக்காவை சேர்ந்த விலங்கு உரிமை அமைப்பான பீட்டா (PETA), அமுல் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், வளர்ந்து வரும் சைவ உணவு மற்றும் பால் சந்தையை பயன்படுத்திக் கொண்டுபால் கூட்டுறவு சமூகம் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம் என்று எழுதியது.
பீப்பிள் ஃபார் தி எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (People for the Ethical Treatment of Animals -PETA ) இந்தியா நிறுவனம் மாட்டுபாலுக்கு பதிலாக சைவ பால் தயாரிப்பிற்கு மாற அமுலுக்கு பரிந்துரைத்த நிலையில், அமுல் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி அதற்கு பதிலடி கொடுத்தார்.
பெட்டாவின் பரிந்துரை குறித்த ஊடக அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட சோதி, விலங்குகள் நல உரிமை அமைப்பு “10 கோடி நிலமற்ற பால் உற்பத்தியாளர்களுக்கு” வாழ்வாதாரத்தை வழங்குமா என்று கேட்டார்.
ALSO READ | புதிய ஐடி விதிகளை கடைபிடிக்காமல் முரண்டு பிடிக்கும் ட்விட்டர்; அடுத்தது என்ன
ட்விட்டரில் இதற்கு பதிலடி கொடுத்த சோதி, “அவர்கள் 10 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு (அதில் 70% நிலமற்றவர்கள்) வாழ்வாதாரத்தை வழங்குவார்களா, அவர்கள் குழந்தைகள் பள்ளி கட்டணத்தை செலுத்துவார்களா. அதில் எத்தனை பேர், விலையுயர்ந்த ஆய்வகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவை தயாரிக்க முடியும்? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Peta wants Amul to snatch livelihood of 100 mill poor farmers and handover it's all resources built in 75 years with farmers money to market genetically modified Soya of rich MNC at exhorbitant prices ,which average lower middle class can't afford https://t.co/FaJmnCAxdO
— R S Sodhi (@Rssamul) May 28, 2021
மேலும், அமுலாவின் நிர்வாக இயக்குனர், சோயா பாலின் விலை மிகவும் அதிகம் என்பதால், அந்த பால் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது என்று கூறினார்.
75 ஆண்டுகளில் உருவாக்கியுள்ள அனைத்து வளங்களையும் விவசாயிகளின் பணத்துடன் பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்ப்டைத்து, மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது. ”
ALSO READ | ஜூன் முதல் உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு: விமான போக்குவரத்து அமைச்சகம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR