ஏர் இந்தியா விமானம்: அவ்வப்போது பறக்கும் விமானத்தின் உள்ளே நடக்கும் பல விசித்திரமான சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. சில நாட்களாக விமானத்தில் பயணிகள் மீது சிறுநீர் கழித்த சம்பவம், நடு வானில் பயணிகளுடன் தகராறு என பல சம்பவங்கள் அப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது தேள் ஒன்று கடித்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விமானம் வானில் பறந்து கொண்டிருந்ததால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானம் ஏர் இந்தியாவுக்கு சொந்தமானது. இந்த சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது.
தேள் கடிக்கு உள்ளான பெண் பயணி
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா ( Air India) விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்த சம்பவம் நடந்தது என தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த உடனேயே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரிதான மற்றும் துரதிருஷ்டவசமான விபத்து
ஏப்ரல் 23, 2023 அன்று, ஏர் இந்தியா வெளியிட்ட இறுதி அறிக்கையில், எங்கள் விமான எண் AI-630 என்ற விமானத்தில், பயணி ஒருவர்க்கு தேள் கொட்டியதால் மிகவும் அரிதான மற்றும் துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் நெறிமுறை பின்பற்றப்பட்டு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தேள் அகற்றப்பட்டது. அதன் பிறகு, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சம்பவத்தை தொடர்ந்து, சலவை சேவைகளை வழங்குபவர்களுக்கு, போர்வைகளில் பூச்சி தாக்குதல் ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவைப்பட்டால், அவற்றை சுத்தம் செய்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்துமாறு, ஏர் இந்தியா கேட்டரிங் துறையிடம் கேட்டுள்ளது.
மேலும் படிக்க | காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!
'டாக்டருடன் தயாராக இருங்கள்'
நாக்பூர்-மும்பை விமானத்தில் பெண் ஒருவரை தேள் கடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் வானில் இருக்கும் போது, மருத்துவருடன் தயாராக இருக்கும்படி மும்பை விமான நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. விமான நிலையத்தை அடைந்த உடனேயே, அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏர் இந்தியாவும் பூச்சிகளைக் கொல்லும் வாயுவை, விமானத்திற்குள் வெளியிட்ட போது, தேள் பிடிபட்டது என்று கூறியுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேலும், கடந்த பிப்ரவரி 27 அன்று துபாய்-டெல்லி விமானத்தின் போது விமானியின் பெண் நண்பர் விமானி அறைக்குள் நுழைந்த சம்பவத்தை சரியான நேரத்தில் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சனுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்தியாவின் விமான போக்குவரத்து இயக்குநரமான DGCA, விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விமான பயணி ஒருவரின் மோசமான நடத்தை குறித்து தகவல் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா மீது அபராதத்தை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விமான கண்ணாடியில் விரிசல்.. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ