உடல் எடையை குறைக்கும் முய்றசியில் இருப்போர், தங்களது தட்டில் பாதியை காய்கறிகளால் நிரப்புவதை பார்த்திருப்போம். அவை, உடல் எடையை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள விஷயங்களில் ஒன்றாகும். பெரும்பாலான காய்கறிகள் நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. எடை இழப்புக்கு மருத்துவ சிலர் நிபுணர்கள் குறிப்பிட்ட ஒரு சில காய்கறிகளை பறிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன காய்கறிகள் தெரியுமா…?
1. கீரை வகைகள்:
கீரை மற்றும் அதை சார்ந்த காய்கறிகள், உடல் எடையை குறைக்க வழிவகுக்கும். இவற்றை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து தொப்பையை குறைக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்ற்னார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு வாய்வில், உடல் எடைக்குறைப்பில் இருப்பவர்கள் கீரை சாப்பிட்டால் விரைவிலேயே அதற்கான பலன்களை கண்டுகொள்வதாக கூறப்பட்டுள்ளது. வேகவைத்த கீரையை தினமும் தங்கள் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்ற்னர்.
மேலும் படிக்க | உலர் திராட்சையில் இருக்கு அபூர்வ நன்மைகள்: ஆனால்... ஒரு நாளைக்கு இத்தனைதான்
2. காளான்:
காளான் சுவையான உணவு வகைகளில் ஒன்று. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களால் என அனைவராலும் காளான் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவாகும். காளான்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடை இழப்பு மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காளான், உடல் எடை குறைப்பிற்கு உதவுவது மட்டுமன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யுமாம். காளானில் புரதம் நிறைந்துள்ளதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன, இதன் விளைவாக கொழுப்பு இழப்பு ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
3.காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி:
காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்களை அதிகரிக்க செய்யும் பண்புகள் நிறைய உள்ளன. ப்ரோக்கோலியில் உள்ள பைடோ கெமிக்கல்ஸ் எனும் சத்து, உடலில் கொழுப்பு ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. இதே பண்பு காலிஃபிளவருக்கும் உள்ளது. தொப்பை போடுவதையும் தேவையற்ற கொழுப்பு சேருவதையும் காளிஃப்ளவர் தடுக்கிறது. இதில் வைட்டமின் சி உள்ளதால் தசை மற்றும் எலும்புகளும் வலுவாக இருக்க உதவுகிறது.
4.கேரட்:
பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் உடல் எடையை குறைக்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி விளையும் காய்கறிகளுள் ஒன்று கேரட். இதில், நார்ச்சத்து மற்றும் உடலுக்கு ஏற்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கிறது. உடலில் உள்ள பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவும் காய்கறி, கேரட். இதை சாலட், சப்ஜி, சாறு,பொறியல் போன்ற பல வகைகளில் செய்து சாப்பிடலாம்.
5. குடை மிளகாய்:
உணவுக்கு சுவை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்று குடை மிளகாய். இதில், பெல் பெப்பர் எனப்படும் ஒரு வகை குடை மிளகாயில் கொழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. வைட்டமின் சி சத்து உள்ளதால் மன நலம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கவும் இந்த வகை குடை மிளகாய் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், பெல் பெப்பர் குடை மிளகாயை தங்களது தினசரி உணவு டயட் சார்டில் சேர்த்துக்கொள்ளலம். இதன் ரிசல்ட் விரைவிலேயே தெரிய வரும்.
மேலும் படிக்க | அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா... காரணங்கள் ‘இதுவாக’ இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ