நீரிழிவு நோய் இருக்கா? அப்போ இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்

Diabetes Control Tips: நீரிழிவு நோயால், உடலின் இந்த பாகங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன, அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அதை எப்படி பாதுகாப்பது என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2022, 09:23 AM IST
  • இந்த உறுப்புகள் நீரிழிவு நோயில் பாதிக்கப்படுகின்றன
  • நீரிழிவு என்றால் என்ன?
  • நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி
நீரிழிவு நோய் இருக்கா? அப்போ இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம் title=

நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் ஒரு நோயாகும். நீரிழிவு நோய்க்கான உறுதியான மருந்தை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், தடுக்க சிறந்த வழி உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பு தான். இதற்கு சிறந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோய் ஒரு சிக்கலான நோயாகும், இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கவில்லை என்றால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது மற்றும் உடலின் பல பாகங்களை பாதிக்கத் தொடங்குகிறது. எனவே நீரிழிவு நோயில் கவனிப்பு அவசியமான உறுப்புகள் எவை என்பதை அறிந்து கொள்வோம். 

இந்த உறுப்புகள் நீரிழிவு நோயில் பாதிக்கப்படுகின்றன

1. இதயம்
நீரிழிவு நோயாளிகள் இதய நோயால் பாதிக்கப்படுவதை நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். உங்களுக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் தமனிகளில் அடைப்பு ஏற்படும், இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது, இது பின்னர் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயில் உங்கள் இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியமாகும்.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

2. சிறுநீரகம்
நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக நோயை எதிக்கொள்ள நேரிடும். இதற்குக் காரணம், இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தான், சிறுநீரகத்துடன் தொடர்புடைய சிறிய இரத்த நாளங்கள் சேதமடைந்து வீக்கமடைகின்றன, சில சமயங்களில் கிரியேட்டினின் ஆபத்தான நிலையை அடைந்து சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை உருவாக்குகிறது. 

3. பாதம்
சர்க்கரை நோய் நம் பாதங்களையும் பாதிக்கிறது. நீங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கவில்லை என்றால், பாதத்தின் நரம்புகள் சேதமடைய ஆரம்பிக்கும். மேலும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு சர்க்கரை நோயாளிகளின் பாதங்கள் பல சமயங்களில் மரத்துப் போவதற்கான காரணம் இதுதான். இதனால் சிலருக்கு கால் வலியும் இருக்கும்.

மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

4.கண்கள்
உங்கள் இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், அது கண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் பலர் பார்வையை இழக்கிறார்கள் அல்லது அவர்களின் பார்வை பலவீனமாகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரையில் அதிக திரவம் கிடைக்கும், இது ஆபத்தானது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தலைமுடி ஆரோக்கியமாக வளர குருமிளகு எண்ணெய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News