பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் இனி Coffee விற்ககூடாது என தென்கொரியா அரசு அறிவித்துள்ளது!
Coffee-ல் இருக்கும் அளவுமிகுதி Caffein காரணமாக பள்ளி மாணவர்களுக்கு புத்தி மட்டு ஏற்படுவாதக கூறி, பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் Coffee விற்க வரும் செப்டம்பர் 14-ஆம் நாள் முதல் தடை விதிப்பதாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு துவங்கி அதிக அளவு Caffein சேர்க்கப்பட்டுள்ள Caffee-களை பள்ளி வளாகத்திற்குள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் Coffee இயந்திரங்கள் மூலம் பள்ளிகளில் Coffee விற்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உணவு கட்டுப்பாட்டு துறை அமைச்சகம் தெரிவிக்கையில்... "தேர்வு நேரங்களில் மாணவர்கள் நீண்ட நேரம் படிக்க வேண்டியுள்ளது, அப்போது அவர்களுக்கு உறக்கம் வராமல் இருக்க Coffee உறுதுணையாக உள்ளது. ஆனால் Coffee-ல் கலக்கப்படும் Caffein அளவு அவர்களுக்கு மந்த தன்மை உண்டாக்குகின்றது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் புத்துணர்ச்சி பானங்களில் சேர்க்கப்படும் பால், தேநீர்களில் உள்ள வேதிப்பொருட்கள் மாணவர்களுக்கு மந்த உணர்வை உண்டாக்குகின்றது.
மேலும் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள Coffee இயந்திரங்களும் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களில் இருந்து எடுக்கப்படும் என பள்ளி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.