அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது பரவலாக பேசப்படும் விஷயம் என்றாலும், கைபேசி பயன்பாடு என்பது இன்று தவிர்க்க முடியாத வழக்கமாக மாறிவிட்டது. அதிலும் தலை குனிந்தபடியே மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் விரைவில் சீர்கெட்டுப் போகிறது. மூட்டுவலி, கழுத்துவலியால் சிகிச்சை பெறும் நிலைக்கு பலர் ஆளாகிவரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இது தொடர்பாக செய்த ஆராய்ச்சி அதிர்ச்சியை தருகிறது.
மொபைல் பயன்படுத்தினால் மூட்டு வலி பாதிப்பு
AIIMS மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில், மொபைல் போன் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. கைப்பேசியைப் பார்க்க சற்று வளைந்தாலும், கழுத்து 15 டிகிரி வரை வளைக்க வேண்டும், இதன் காரணமாக கழுத்தில் மூன்று மடங்கு சுமை அதிகரிக்கிறது.
தலைநகர் டெல்லியைச் சேர்ந்த இளைஞர்களில் 58 சதவீதத்தினர் ஒருவித மூட்டு வலியால் அவதிப்படுவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 சதவீதம் பேருக்கு தோள்பட்டை வலி, 27 சதவீதம் பேருக்கு முதுகெலும்பு மற்றும் கீழ் முதுகு வலி உள்ளது. ஒன்பது சதவீத இளைஞர்கள் முழங்கால் வலி மற்றும் மணிக்கட்டு வலி ஆகியவற்றால் சிரமப்படுகின்றனர். 6 மணி நேரம் அல்லது அதற்கு மேல் செல்போன்களை பயன்படுத்திய 510 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலான சமயங்களில் இந்த வலியை ஏற்படுத்தும் வில்லனாக இருப்பது மொபைல் போன். ஒரு வளர்ந்த மனிதரின் தலை பொதுவாக 4 முதல் 5 கிலோ எடை வரை இருக்கும், ஆனால் நாம் குனிந்து பார்க்கும்போது, கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு இந்த எடை சுமையாகிறது.
மேலும் படிக்க | மொபைல் போனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்
கழுத்து 15 டிகிரி வளைகிறது
மொபைல் திரையைப் பார்க்க கழுத்தை 15 டிகிரி கீழ்நோக்கி வளைக்கும்போது, கழுத்தில் எடை மூன்று மடங்கு அதிகமாகும். நீண்ட நேரம் மொபைல் திரையில் மூழ்கி இருப்பவரின் கழுத்து 60 டிகிரி வரை வளைகிறது. 60 டிகிரி வளைக்கும் போது, தலையின் எடை 4 முதல் 5 கிலோ வரை அதிகரித்து, கழுத்து மற்றும் முதுகெலும்பு 25 கிலோவுக்கு மேல் எடையை சுமக்க வேண்டியிருக்கிறது.
பொதுவாக மரபணுக் காரணங்களால் ஏற்படும் மூட்டுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதம் பேர் மொபைல் போன்களை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதாலும், மோசமான நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மூட்டு வலி குறித்து எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நோய் ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
சிக்கல்களை ஏற்படுத்தும் மூட்டுவலி
முடக்கு வாதம், அதாவது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி போன்ற நோய் உண்மையில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் கோளாறு ஆகும். இந்த நோயில் Th17 மற்றும் Treg செல்கள் இடையே சமநிலை மோசமடையத் தொடங்குகிறது. Th17 செல்கள் வீக்கமடையத் தொடங்குகின்றன மற்றும் T செல்கள் என்று நிபுணர்கள் அழைக்கும் Treg செல்கள் மாறத் தொடங்குகின்றன. படிப்படியாக, இந்த இரண்டு செல்களிலும் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் டிஎன்ஏவையும் சேதப்படுத்துகின்றன.
மேலும் படிக்க | பெண்களுக்கு வரும் எலும்பு வலிக்கு இதுவே காரணம்! சாப்பிட வேண்டிய உணவுகள்
AIIMS இன் ஆராய்ச்சியில் மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட 64 பேர் கலந்துக் கொண்டனர். 8 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், 64 பேரில் 32 பேருக்கு நிபுணர்கள் கண்காணிப்பில் யோகாவும், 32 பேருக்கு மருந்து மட்டுமே கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வாரத்தில் 5 நாட்கள் 120 நிமிடங்கள் யோகா செய்ய அறிவுறுத்தப்பட்டது.
எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாத சில எளிய ஆசனங்கள் செய்யப்பட்டது, அது தவிர, மைக்ரோ உடற்பயிற்சிகள், பிராணாயாமம் மற்றும் தியானம் என யோகா, தியானம், உடற்பயிற்சி அனைத்தும் செய்த நோயாளிகளின் செல்கள் மேம்பட்டது.
இது தவிர, வீக்கத்திற்கு காரணமான செல்களும் ஆரோக்கியமாகி, வீக்கம் குறைந்தது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் ரீமா தாதா தெரிவித்தார். மருந்துகளுடன் சேர்த்து நோயாளிகள் யோகா பயிற்சியும் செய்தால் அது நல்ல பலனளிப்பதாக ஆய்வு உறுதியாக தெரிவிக்கிறது.
மூட்டு வலிக்கான காரணங்களில் 40 சதவீதம் மனிதர்களின் கைகளில் இல்லை. சில சந்தர்ப்பங்களில் இது ஒரு பிறவி மரபணு கோளாறாக, பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரவுகிறது, ஆனால் 60 சதவீத காரணங்கள் குணப்படுத்தக்கூடியவை. மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தவறான வழியில் உட்கார்ந்து வேலை செய்வது, அலுவலகத்தில் நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்துகொள்வது, உடல் பருமன் மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை இதில் பெரும்பாலான வாழ்க்கை முறை காரணங்கள் ஆகும்.
மேலும் படிக்க | ஆஸ்டியோபீனியா & எலும்புப்புரை நோயை ஓட ஓட விரட்டும் பழக்கங்களும் உணவுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ