Eating habits for quick Weight Reduce: உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க உங்கள் உணவை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்வது முக்கியமாகும். இது தவிர, உணவுப் பழக்கவழக்கங்களில் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் நிதி கக்கர் தனது இன்ஸ்டாகிராமில் தகவல் ஒன்றை அளித்துள்ளார், இதை பின்பற்றுவதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம், மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பது மற்றும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை ஊக்குவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவது முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி கக்கர் கூறினார். இதற்கு சில எளிய சமையல் குறிப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்நிலையில் உடல் எடையை விரைவாக குறைக்க எந்த 5 பழக்கங்களை பின்பற்றலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்க உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள் | How to change eating habits to lose weight fast:
வெந்தயம் இலவங்கப்பட்டை தேநீர்: இந்த தேநீரை தயார் செய்ய, ஒரு டீஸ்பூன் வெந்தய விதையை எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து 2-3 நிமிடங்கள் அந்த தண்ணீரை கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உடல் எடையைக் (Weight Loss Tips) குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க | விந்தணுவில் உயிர் வாழும் கொரோனா வைரஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இஞ்சி மற்றும் எலுமிச்சை ஷாட்ஸ்: இந்த ஷாட்ஸை தயார் செய்ய, முதலில் சிறிது இஞ்சியை கழுவி, நன்கு துருவவும். இப்போது இதை ஒரு கோப்பையில் வைத்து அதில் 1.5 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளவும். இப்போது இஞ்சி மற்றும் எலுமிச்சை பேஸ்ட்டை 2 கப் தண்ணீரில் கலந்து, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதை ஒரே ஷாட்டில் குடிக்கவும், மீதமுள்ளவற்றை காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும்.
எலுமிச்சையுடன் சாலட் சாப்பிடலாம்: தினமும் மதிய உணவிற்கு முன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து ஒரு எளிய சாலட்டை தயார் செய்து சாப்பிடுங்கள். இது எடை இழக்க எளிதாக்கும்.
தினை மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்: உங்கள் உணவில் பல்வேறு வகையான தினைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பருவகால காய்கறிகளைச் சேர்க்கலாம். இது உடலில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைபாட்டை நீக்க உதவும். இது உங்கள் நல்ல குடல் பாக்டீரியாவை அதிகரிக்க உதவுகிறது, மேலும் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
பெருஞ்சீரகம் ஓமம் தேநீர்: பெருஞ்சீரகம் மற்றும் ஓமம் தேநீர் தயாரிக்க, 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் 1/2 தேக்கரண்டி ஓமம் விதைகளை 150 மில்லி தண்ணீரில் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்போது அதை வடிகட்டி குடிக்கவும். இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயில் லாஸ் வர ... பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ