How To Make Roti More Healthier: கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தி என்னும் ரொட்டி வடஇந்திய உணவாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது தென்னிந்தியாவின் முக்கிய உணவாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட தினசரி உணவாக மாறிவிட்ட சப்பாத்தியை அதிக சத்தானதாகவும் சுவையாகவும் செய்யலாம். ஆரோக்கியமான சப்பாத்தி தாயரிக்க, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சில பொருட்களை கலந்து செய்வதால், சாதாரண ரொட்டியை ஒரு சூப்பர்ஃபுட் ஆக, சத்தான சப்பாத்தியாக ஆக்கலாம்.
ராகி என்னும் கேழ்வரகு மாவு
கோதுமை மாவில் சிறிது கேழ்வரகு என்னும் ராகி மாவை கலந்து சப்பாத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். சிறுதானியங்களின் ராணி என அழைக்கப்படும் ராகியில், கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக உள்ள கேழ்வரகு, கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
தண்டுக் கீரை விதை என்னும் அமர்நாத் மாவு
அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவு கோதுமையை விட அதிக அளவு புரதம் கொண்டுள்ளது. இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அளவை கட்டுப்படுத்துகிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள், இதனை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
வெந்தய பொடி அல்லது வெந்தய கீரை
வெந்தயம் (Fenugreek) ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும் . சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட வெந்தயத்தில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெந்தய பொடி சிறிதளவு கலந்து சப்பாத்தி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்கும். காய்ந்த வெந்தய கீரை என்னும் கசூரி மேத்தி கடைகளில் கிடைக்கும். அதனை கலந்தும் சப்பாத்தி செய்யலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்
ஆளி விதை
எண்ணற்ற நலன்களை கொண்டது ஆளி விதை (Flax seeds). நார்ச்சத்து , இரும்பு சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த ஆளி விதைகளை சப்பாத்தி மாவில் பிசைந்து ரொட்டி செய்வதால் ரொட்டி இன்னும் மேலும் ஆரோக்கிய உணவாக இருக்கும். ஆளி விதைகளை பொடி செய்து மாவுடன் கலக்கலாம்.
முருங்கை கீரை
முருங்கை இலையில் இருக்கும் ஊட்டசத்துக்கள் எண்ணிலடங்காதவை. இதனை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முருங்கை இலையில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் உட்பட பல பண்புகள் நிறைந்துள்ளன. முருங்கைக் கீரயை வதக்கி ரொட்டி மாவில் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும். ரத்த சோகை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். முருங்கை கீரயை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனை சிறிதளவு கலந்தும் ரொட்டி செய்யலாம்.
மேலே, குறிப்பிட்ட பொருட்களை சப்பாத்தி மாவு பிசையும் போது, வெவ்வேறு நாட்களில் உங்கள் ருசிக்கேற்ப ஒவ்வொரு பொருளாக கலந்து சப்பாத்தி செய்து சாப்பிடுவதனால் உடலில் சத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதோடு, நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ