எலுமிச்சைச் சாறு அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா?

Side Effects of Drinking Lemon Water: கோடையில் எலுமிச்சை சாற்றை அதிகம் உட்கொண்டாலும், அதன் மருத்துவ குணங்களால், அனைத்து சீசனிலும் இது மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கப்படுகிறது, ஆனால் அதில் சில குறைபாடுகளும் உள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2022, 01:11 PM IST
  • எலுமிச்சை சாற்றின் தீமைகள்
  • இது போன்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும்
  • எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
எலுமிச்சைச் சாறு அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா? title=

எலுமிச்சை சாறு நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், உடல் எடை குறையத் தொடங்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருப்பதை நிரூபிக்கிறது, இதன் காரணமாக வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை இது நீக்க உதவும். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதன்படி எலுமிச்சம்பழ ஜூஸை அதிகமாக குடிப்பது ஏன் உடலுக்கு நல்லதல்ல என்று இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணர் 'நிகில் வாட்ஸ்' கூறியுள்ளார். அதை பற்றி இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

எலுமிச்சை சாற்றை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

உடலில் உள்ள உறுப்புகள் செயல் இழக்கூடும்
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இந்த சத்து நம் உடலில் அதிகரித்தால், பல முக்கிய உறுப்புகளை பாதிகப்படும். இதனால் மருத்துவர்கள் பலர் இதை குறைந்த அளவிலேயே உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

வயிற்று வலி 
பொதுவாக நாம் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும், ஏனெனில் இது அமிலத்தன்மையின் அபாயத்தை அதிக அளவில் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனை இத்துடன் நிற்காது, எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

ਨਿੰਬੂ ਪਾਣੀ ਸਿਹਤ ਲਈ ਚੰਗਾ, ਪਰ ਜ਼ਿਆਦਾ ਨਿੰਬੂ ਪਾਣੀ ਪੀਣਾ ਕਰ ਸਕਦਾ ਸਿਹਤ ਖਰਾਬ !

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

வாயில் கொப்புளங்கள் ஏற்படும்
எலுமிச்சை பொதுவாக நம் வாய் துர்நாற்றம் மற்றும் பற்களை சுத்தம் செய்ய உதவும், ஆனால் எலுமிச்சை சாற்றை அதிகமாக குடித்தால், அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வாய் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வாயில் எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும்.

பலவீனமான பற்கள் 
நீங்கள் எலுமிச்சை சாற்றை குடிக்கும் போதெல்லாம், கண்டிப்பாக ஸ்ட்ரா பயன்படுத்துங்கள், ஏனெனில் இது பற்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை குறைக்கும். இப்படி செய்வதால் பற்கள் பலவீனமடையாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News