புதுடெல்லி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. எனவே தவறான தகவல்களால், மாணவர்கள், தங்கள் கவனத்தை சிதறவிட வேண்டாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை (2022, ஜனவரி 5) பொது அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலில், சிபிஎஸ்இ 2022-ம் ஆண்டுக்கான 2வது வாரியத் தேர்வு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பும் தளங்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கியத் தேர்வு முறை மாற்றம் குறித்து 'பிரேக்கிங் நியூஸ்' போன்ற சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி சில ஆன்லைன் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்பி மாணவர்களையும் பெற்றோர்களையும் தவறாக வழிநடத்துவது தொடர்வதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான, சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) இரண்டாம் பருவத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போலவே நடைபெறும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
ALSO READ | பள்ளியில் கருகிய நிலையில் மாணவி மீட்பு! ஒற்றை வார்த்தையைச் சொல்லி உயிரிழந்த பரிதாபம்
முதல் பருவ தேர்வு முடிந்தது
மாணவர்களின் நலன் கருதி, தேர்வு முறையில் மாற்றங்களை வாரியம் அறிவித்துள்ளது (ஜூலை 5, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 51 இல் குறிப்பிடப்பட்டுள்ளது). பருவம் 1 தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது, மேலும் அதன் வடிவம் 2ஆம் பருவத்தேர்வுக்கான அதே சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் தகவல்களை நம்புங்கள்'
வாரியம் மாணவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE கால 2 வாரியத் தேர்வு 2022 மார்ச்-ஏப்ரல், 2022 இல் நடைபெற உள்ளது.
10-12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். 10வது மற்றும் 12வது முடிவுகள் Digilocker செயலியிலும், digilocker.gov.in என்ற இணையதளத்திலும் கிடைக்கும். மேலும், இந்த முறையும் UMANG செயலி மற்றும் SMS மூலம் முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.
ALSO READ | இளங்கலை பட்டப்படிப்பு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR