அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் சுமார் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 09:10 PM IST
  • அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?
  • ஆலயம் எப்போது கட்டி முடிக்கப்படும்?
  • ராமர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் சுமார் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் (Ram Temple), பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானப் பணிகளுக்கு 1100 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படிவதாக ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா நியாஸ் (Ram Janmabhoomi Tirath Kshetra Nyas) அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் (Swami Govind Dev Giri Maharaj) கூறுகிறார்.

“பிரதான கோயிலின் கட்டுமானம் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும், இதற்கு 300-400 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 70 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்ய 1,100 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்'' என்று அவர் தெரிவித்தார். 

Also Read | சரித்திரத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

ராமர் கோயில் கட்டுமானத் திட்டத்துடன் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த செலவு மதிப்பீடு கணிக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அவர் தெரிவித்தார். கோயில் (Temple) கட்டுமான செலவு குறித்து அறக்கட்டளை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"கோயில் கட்டுமானத்திற்காக சில நிறுவனங்களிலிருந்து பணம் சேகரித்துள்ளோம். சில கார்ப்பரேட் குடும்பங்கள் எங்களிடம் வந்து, கோயிலின் வடிவமைப்பை தங்களிடம் கொடுத்தால், தாங்களே கட்டித் தருவதாக கேட்டுக்கொண்டன, ஆனால் நாங்கள் அந்த கோரிக்கையை பணிவுடன் மறுத்துவிட்டோம்'' என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா நியாஸ் (Ram Janmabhoomi Tirath Kshetra Nyas) அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் (Swami Govind Dev Giri Maharaj), கோயில் கட்டுமானத்திற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து (Ram Nath Kovind) 5,00,100 ரூபாய் நன்கொடை பெற்றார்.  

Also Read | குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News