கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம். தீர்ப்பு வழங்கி 6 வாரங்கள் இன்றுடன் (மார்ச்-29) முடிவடைந்தது.இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவில் முடிவடையும் நிலையில், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை
இந்த நிலையில் நேற்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய நேற்று மாலை 6 மணியளவில் முதலைமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.
ஆனால், திடிரென காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என நேற்று மாலை தமிழக அரசு அறிவித்துள்ளது.இன்றாவது காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துவங்கியது.
#TamilNadu CM Edappadi K. Palaniswami holds meeting with ministers & officials on Cauvery water issue at Secretariat. pic.twitter.com/JRygDqjq42
— ANI (@ANI) March 29, 2018