Bangladesh Former Prime Minister Sheikh Hasina Net Worth: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அங்கு மூண்ட கலவரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்ட 45 நிமிடத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியது. வங்கதேச முன்னாள் முதல்வர் ஷேக் ஹசீனா அங்கு உள்ள தனது ஆடம்பர பங்களா மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா வந்தார்.
வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.
பியூனிடம் ரூ.284 கோடி சொத்து
ஒரு மாதத்திற்கு முன்பு ஷேக் ஹசீனாவின் பியூனின் சொத்துப் பிரச்சினை வங்கதேசத்தில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. ஷேக் ஹசீனாவின் வீட்டில் பணிபுரியும் பியூன் ஜஹாங்கீர் ஆலம் ரூ.284 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன்பின் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பியூனிடம் 284 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருந்தால், ஷேக் ஹசீனாவிடம் எவ்வளவு சொத்து இருக்கும்? இதைவிட அதிகமாக இருக்குமா? அப்படி அல்ல. 2024ஆம் ஆண்டின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, ஷேக் ஹசீனாவின் மொத்த சொத்து மதிப்பு 4.36 கோடி வங்கதேச டாக்கா அதாவது சுமார் 3.14 கோடி இந்திய ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனஸ்... யார் இவர்? - உடனே மாற்றம் வருமா?
விவசாயத்தின் மூலம் அதிக வருமானம்
வங்கதேச முன்னாள் முதவர் ஷேக் ஹசீனாவின் வருமானத்தில் பெரும் பகுதி விவசாயத்தில் இருந்து வருகிறது. அவரது பெயரில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது தவிர மீன் வளர்ப்பு மூலமும் வருமானம் ஈட்டுகிறார் அவர். இதுமட்டுமல்லாமல், தனது பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்து, ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் பெறுகிறார் ஷெக் ஹசீனா. ஜவுளி, தொலைத்தொடர்பு, வங்கி உள்ளிட்ட பல துறைகளில் அவர் முதலீடு செய்துள்ளார். இவற்றில் அதிக அளவில் அவர் தொலைத்தொடர்பு துறையில் முதலீடுகளை செய்துள்ளார்.
ஷேக் ஹசீனாவிடம் எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா?
2022 ஆம் ஆண்டில், ஷேக் ஹசீனா விவசாயம் மூலம் மட்டும் 78 லட்சம் சம்பாதித்தார். அவரிடம் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. அவர் பெயரில் உள்ள வயல்களின் மதிப்பு சுமார் 6 லட்சம் டாக்கா. அவர் 34 லட்சத்துக்கும் மேலான மதிப்பிலான நிலங்களின் சொந்தக்காரர். ஷேக் ஹசீனாவிற்கு லண்டனிலும் வீடு உள்ளதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அவரது பெயரில் இல்லை. இதேபோல், ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் பல நாடுகளில் பரவியுள்ளதாக Perplexity AI மூலம் தெரிய வருகிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டாக்காவில் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான மாளிகை உள்ளது. மேலும் அவருக்கு ஒரு சில்ஹெட் அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி டாலர்கள் என கூறப்படுகிறது. அவர் சிங்கப்பூர் மற்றும் துபாயிலும் சில சொத்துகளை வாங்கியுள்ளார்.
ஷேக் ஹசீனாவிடம் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளது. எனினும், அது அவரருக்கு பரிசாக கிடைத்த கார் ஆகும். அவரது பெரும்பாலான சொத்துக்கள் அவரது சகோதரி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஷேக் ஹசீனா முதுகில் குத்திய வங்கதேச ராணுவ தளபதி - இத்தனைக்கும் உறவினர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews