SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: உயர்ந்தது வட்டி விகிதம்.... அதிகரிக்கும் EMI

SBI Loan Interest Rates July 2024: MCLR விகிதங்களுடன் வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பெரும்பாலான சில்லறை கடன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இந்த கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI இனி அதிகரிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2024, 01:02 PM IST
  • SBI வாடிக்கையாளரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
  • இங்கே விரிவாக காணலாம்.
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: உயர்ந்தது வட்டி விகிதம்.... அதிகரிக்கும் EMI title=

State Bank of India: இந்தியாவின் மிகப்பெரிய, நம்பகமான மற்றும் மிக பிரபலமான வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் (State Bank of India) ஒன்று. எஸ்பிஐ -இல் கடன் வாங்கியுள்ளவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

SBI Loan Interest Rates July 2024: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கடன் பெறுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி உள்ளது. வங்கி, சில தவணைக்காலங்களுக்கு, மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் பெஸ்ட் லெண்டிங் ரேட்டில் (MCLR) 10 அடிப்படைப் புள்ளிகள் (bps) வரை உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், புதிய கட்டணங்கள் ஜூலை 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கியின் இந்த முடிவால், கார் கடன், வீட்டுக் கடன் போன்ற பெரும்பாலான நுகர்வோர் கடன்களை கட்ட இனி வாடிக்கையாளர்கள் முன்பை விட அதிக தொகையை செலுத்த வேண்டி இருக்கும். 

SBI: சமீபத்திய கடன் வட்டி விகிதங்கள் இதோ

- SBI ஒரு மாத எம்சிஎல்ஆர் பெஞ்ச்மார்க் விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.35% ஆக உயர்த்தியுள்ளது. 

- 3 மாத எம்சிஎல்ஆர் பெஞ்ச்மார்க் விகிதம் 10 பிபிஎஸ் அதிகரிக்கப்பட்டு 8.40% ஆக அதிகரித்துள்ளது.

- ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட காலத்திற்கான MCLR விகிதங்கள் 10 bps அதிகரிக்கப்பட்டு, முறையே 8.75%, 8.85% மற்றும் 8.95% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

- மூன்றாண்டு எம்சிஎல்ஆர் 5 பிபிஎஸ் அதிகரித்து 9% ஆக உயர்ந்துள்ளது.

முந்தைய விகிதங்களுக்கும் தற்போதைய விகிதங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி இங்கே காணலாம்:

கால அளவு முந்தைய MCLR (in %)  தற்போதைய MCLR (in %)
ஓவர்நைட் 8.1 8.1
1 மாதம்  8.3 8.35
3 மாதங்கள் 8.3 8.4
6 மாதங்கள் 8.65 8.75
1 ஆண்டு  8.75 8.85
2 ஆண்டுகள் 8.85 8.95
3 ஆண்டுகள் 8.95 9

மாதா மாதம் கட்டும் EMI -இல் என்ன பாதிப்பு ஏற்படும்?

- MCLR விகிதங்களுடன் வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பெரும்பாலான சில்லறை கடன்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

- இதன் பொருள் என்னவென்றால், இந்த கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI இனி அதிகரிக்கும். 

- ஒருவர் ஒரு வருட MCLR உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடனைப் பெற்றிருந்து, ரீசெட் காலம் நெருங்கிவிட்டால், வட்டி விகிதங்கள் தற்போது 10 bps அதிகரிக்கும். 

உதாரணமாக, ஒருவர் 1 வருட MCLR உடன் இணைக்கப்பட்ட, 50 லட்சம் ரூபாய்க்கான வீட்டுக் கடனை பெற்றுள்ளார் என வைத்துக்கொள்வோம். இதுவரை அவருக்கான வட்டி விகிதம் 8.75% ஆக இருந்திருக்கும். புதிய MCLR விகிதங்கள் அமலுக்கு வந்த பின்னர், அதாவது நேற்று முதல், இந்த வட்டி விகிதம் 8.85% ஆக அதிகரித்திருக்கும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி

எம்சிஎல்ஆர் என்றால் என்ன? (What is MCLR)

நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) என்பது குறைந்தபட்ச கடன் விகிதமாகும். இந்த விகிதத்தை விட குறைவாக வங்கிகள் கடன் வழங்க அனுபதிக்கப்படுவதில்லை. ஜூன் மாதத்தில், SBI சில குறிப்பிட்ட தவணைக்காலங்களில் MCLR-ஐ 10 பிபிஎஸ் அதிகரித்தது.

பாரத ஸ்டேட் வங்கி: கூடுதல் தகவல்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகவும் மிகவும் பிரபலமான வங்கியாகவும் உள்ளது. இந்த வங்கியின் நிகர மதிப்பு சுமார் 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. SBI -இல் 22,500 கிளைகள், 63,580 ATMகள்/ADWMகள், 82,900 பிசி அவுட்லெட்டுகள் ஆகியவை உள்ளன. இந்த அமைபுகளுடன் இது இந்தியாவின் பரந்த வங்கி நெட்வொர்க்காக பார்க்கப்படுகின்றது. SBI வங்கி, இந்தியாவில் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது. 

SBI வங்கி ஒரு பார்ச்சூன் 500 நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. SBI -இன் தலைமையகம் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் உள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News