தமிழக அரசு குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து குடும்ப தலைவர் ஆணாக உள்ள ரேஷன் அட்டைகளில் பெண்ணை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் ரேஷன் கார்டில் (Ration Card) உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை ஒப்படைக்க / ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய விண்ணப்பிக்கலாம். எனவே ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை ஆன்லைன் இல் எப்படி மாற்றுவது என்பதை இங்கே பார்க்கலாம்.
ALSO READ | Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?
* முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் குடும்ப தலைவர் மாற்றம் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
* பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
* அதன்பின் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் ஒன்று வரும்.
* பிறகு உங்கள் பக்கம் login ஆகிவிடும். அதை தொடர்ந்து குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்சனை கிளிக் செய்யவும்.
* உங்கள் குடும்ப உறுப்பினர்களின் யாரை குடும்ப தலைவராக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* நீங்கள் குடும்ப தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேரே உள்ள பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.
* குடும்ப தலைவராக மாற்ற செய்ய விரும்புவரின் அதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒரு சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பின்னர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 MB அளவுக்குள் இருக்க வேண்டும். அதையும் புகைப்படம் என்று இருக்கும் பாக்ஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இவை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களது கோரிக்கை வெற்றிகரகமாக பதிவேற்றம் செய்ததற்கான தகவல் வரும். அதனை நீங்கள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR