குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையா? SIP முதலீடு உங்களுக்கு கை கொடுக்கும்

SIP For Children: பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களில் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பும் ஒரு முக்கிய விஷயமாகும். குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோரின் பதற்றமும் அதிகரித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 07:02 PM IST
  • குழந்தைகளின் கல்வியுடன், பெற்றோர்கள் குடும்பத்தின் பிற தேவைகள் மற்றும் அவசரகால நிதி தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறான நிலையில், நெருக்கடிகள் தலைதூக்கும் முன் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
  • இதற்கு, பெற்றோர்கள் சரியான நேரத்தில் சரியான நிதித் திட்டமிடலைச் செய்வது மிக அவசியமாகும்.
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையா? SIP முதலீடு உங்களுக்கு கை கொடுக்கும் title=

உலகம் முழுவதும் பணவீக்கம் பல கட்டங்களைக் கடந்து புதிய சாதனைகளை படைத்துள்ளது. இது உலக மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனுடன் மற்ற பொருளாதார பிரச்சனைகளாலும் சாமானியர்களின் நிதி நிலை குளறுபடியாகி வருகிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. குடும்பம், குழந்தைகள், முதலீடுகள் என அனைத்திலும் இதன் தாக்கம் உள்ளது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களில் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பும் ஒரு முக்கிய விஷயமாகும். குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோரின் பதற்றமும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கல்வியுடன், பெற்றோர்கள் குடும்பத்தின் பிற தேவைகள் மற்றும் அவசரகால நிதி தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலையில், நெருக்கடிகள் தலைதூக்கும் முன் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இதற்கு, பெற்றோர்கள் சரியான நேரத்தில் சரியான நிதித் திட்டமிடலைச் செய்வது மிக அவசியமாகும். மேலும் நல்ல நிதித் திட்டமிடல் என்று வரும்போது, ​​அதில் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி-யின் பெயர் முதலில் வரும். ஏனெனில் இதில், ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் சேமித்து விடலாம்.

SIP இங்கு உதவியாய் இருக்கும் 

எஸ்ஐபி மூலம், சில ஆண்டுகளில் நல்ல தொகையை திரட்டி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். இதன் மூலம் நாளுக்கு நாள் அதிகமாகும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்திலிருந்து விடுபடலாம். குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி, அல்லது நாட்டிற்குள் படித்தாலும் சரி, விலையுயர்ந்த கட்டணங்கள் அல்லது பிற செலவுகளின் பதற்றத்திலிருந்து இதன் மூலம் பெற்றோர் நிவாரணம் பெறலாம். 

ஆகையால், இவ்வளவு நன்மைகள் கொண்ட எஸ்ஐபி மூலம் ஒரு பெரிய தொகையை எவ்வாறு உருவாக்குவது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியமாகும். இதற்கு முதலில் தாமதிக்காமல் எஸ்ஐபி-ஐ தொடங்க வேண்டும். 

ரூ. 500 முதல் எஸ்ஐபி-ஐத் தொடங்கலாம்

ஒவ்வொரு மாதமும் ரூ. 500 என்ற சிறிய தொகையை டெபாசிட் செய்தும் எஸ்ஐபி-ஐத் தொடங்கலாம். இருப்பினும், எவ்வளவு நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பது உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்தது. உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய்க்கு எஸ்ஐபி செய்கிறீர்கள் என்றால், ஆண்டு வருமானம் 12% மற்றும் பணவீக்கத்தையும் கணக்கிட்டால், 20 ஆண்டுகளில், உங்களிடம் ரூ.4.6 லட்சம் இருக்கும்.

மேலும் படிக்க | அசத்தும் எல்ஐசி: ஒரே ஒருமுறை முதலீடு.. வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்! 

எஸ்ஐபி -இன் ரூ 500 கணக்கீட்டை இங்கே புரிந்து கொள்ளலாம்:

sip

தேவையான தொகை 20 ஆண்டுகளில் கிடைக்கும்

20 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தீர்கள் என்றால், நீங்கள் மொத்தம் ரூ.2.4 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தொகை கிட்டத்தட்ட இரு மடங்காக ரூ.4.6 லட்சமாக உயரும். அதாவது ரூ.2.2 லட்சம் கூடுதலாக கிடைக்கும். ஆண்டு பணவீக்கம் 6 சதவீதம் இதில் சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்திருந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.23.2 லட்சம் சேர்ந்திருக்கும். எனினும், நீங்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு வெறும் 12 லட்சம் ரூபாயாக இருக்கும். 

மேலும் படிக்க | Fixed Deposit vs Bonds: உங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடு எது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News