மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலியில் ஜாலி: இந்த தேதியில் டிஏ ஹைக் அறிவிப்பு

7th Pay Commission, DA Hike Update: தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவிகிதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 50 சதவீதமாக அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2024, 02:50 PM IST
  • தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?
  • DA Hike: அறிவிப்பு எப்போது?
  • பிற குடுப்பனங்களிலும் ஏற்றம்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலியில் ஜாலி: இந்த தேதியில் டிஏ ஹைக் அறிவிப்பு title=

7th Pay Commission, DA Hike Update: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசு கிடைக்க உள்ளது. ஹோலி பண்டிகையை ஒட்டி அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசாங்கம் (Central Government) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. அரசாங்கம் மிக விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாத அகவிலைப்படிக்காக மதிய அரசு ஊழியர்கள் (Central Government Employees) நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமான தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) தீர்மானிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் டி ஏ நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வரும். அதன்படி இந்த முறையும் இந்த அறிவிப்பு ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியிடப்படும் என்று ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவிகிதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 50 சதவீதமாக அதிகரிக்கும்.  இது ஊழியர்களின் மாத சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.

மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

பிற குடுப்பனங்களிலும் ஏற்றம்

அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), குழந்தைகளின் கல்வி கட்டணம், குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு, விடுதி மானியம், பயணக் கொடுப்பனவு (TA) ஆகிவற்றிலும்  ஏற்றம் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் மாத சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காணலாம்

DA Hike: அறிவிப்பு எப்போது?

மார்ச் 20 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் இந்த அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான அரியர் தொகையும் ஊதியத்துடன் சேர்ந்து வழங்கப்படும்.

அகவிலைப்படி 50% சதவீதமாக அதிகரிக்கப்பட்டால், ஏழாவது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரையின் கீழ் டிஏ பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை, சம்பளத்துடன் சேர்க்கப்படும். இது நடந்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை காண முடியும். இதன் காரணமாக அவர்களின் பிற கொடுப்பனங்களும் அதிகரிக்கும். மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலமான பண வரவு காத்துக் கொண்டிருக்கின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

மேலும் படிக்க | வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... தபால் அலுவலகத்தின் சிறந்த 5 திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News