வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் ( Kim Jong Un) மனைவி ரி சோல் ஜு (Ri Sol Ju), கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு பொதுவில் தோன்றினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சம் காரணமாக, சிறிய அளவில் நடத்தப்பட்ட, அந்நட்டின் புத்தாண்டு தொடர்ப்பான கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாக அதிகாரப்பூர்வ KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசியாக, கிம் ஜாங் உன் மனைவி Ri Sol Ju செப்டம்பர் மாதம் பொதுவில் பார்க்க முடிந்தது. கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் எம்பாம் செய்யப்பட்ட உடல்கள், அரண்மனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலின் போது, அந்த் அரண்மனைக்கு தனது கணவர் Kim Jong Un உடன் ரி சோல் ஜு சென்ற போது பொதுவில் காணப்பட்டார்.
வட கொரிய அதிபர் இம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல், அவரது மனைவியுடம் பொதுவில் காணபச்து மிகவும் அரிது. ஆனால், Ri Sol Ju, அதிபர் கிம்முடன் சமூக, வணிக மற்றும் இராணுவ பயணங்களில் உடன் சென்று அடிக்கடி சர்வதேச கவனத்தை ஈர்த்தார்,.
ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கழிப்பறைக்கு ‘24 மணி’ நேர காவல்!
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் ஒரு கச்சேரியில் கலந்து கொள்வதற்கு முன்பு, அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பொதுவில் தோன்றாத நிலையில், அவருக்கு உடல் நிலை பாதிப்பு, அவர் கர்ப்பமாக உள்ளார் என பல வகையான தகவல்கள் பரவின.
COVID-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக, வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து விலகியதாகத் தெரிகிறது என்றும், தங்கள் குழந்தைகளுடன் நன்றாக பொழுதை கழிக்கிறார் என்றும், என்று தென் கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது. உளவு நிறுவனம் கிம் மற்றும் ரிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்புகிறது. ஆனால் அவர்களைப் பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லை.
ALSO READ | North Korea: பாப் இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொதுவில் பொது மரண தண்டனை..!!
மேலும், வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தனது எல்லைகளை மூடுவது, பயணக் கட்டுப்பாடுகள் போன்றது உட்பட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR