பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
44 வயதான மேக்ரோன், இரண்டாவது முறையாக பதவியேற்கும் மூன்றாவது பிரான்ஸ் அதிபர் ஆனார். இருப்பினும், 2017 ஆம் ஆண்டு லு பென்னை முதன்முதலில் தோற்கடித்த போது கிடைத்த வாக்கு வித்தியாசத்தை விட தற்போதைய வெற்றி வித்தியாசம் குறைவானதாகும்.
இதுவரை 97% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோன் 57.4% வாக்குகளைப் பெறுவார் என்று உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மேலும் படிக்க | ட்விட்டர வாங்கணும், விலை என்ன: கேட்ட Elon Musk
அவரது வெற்றி உரையில், லு பென் அதிபராக வரக் கூடாது என்பதற்காகக மட்டுமே பலர் தமக்கு வாக்களித்துள்ளனர் என்பதை ஒப்புக்கொண்ட அவர், பல பிரெஞ்சுக்காரர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகி வருகிறது என்ற உணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், நிச்சயம் அதற்கான தீர்வை கொடுப்பேன் என உறுதியளித்தார்.
பிரச்சாரத்தின் ஒரு கட்டத்தில், கருத்துக் கணிப்புகளில் ஒரு சில புள்ளிகள் என்ற அளவில் மேக்ரோனை விட பின்தங்கிய லு பென், பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து போராடுவேன் என்று அவர் உறுதி கூறினார்.
இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இம்மானுவேல் மக்ரோனுக்கு உலக தலைவர்கள் பலர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022
ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், மக்ரோனுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, "இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பைத் தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
மேலும் படிக்க | பிங்க் லேடிக்கு ஆடம்பர வீட்டை கிம் ஜாங் உன் பரிசளித்த காரணம்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்ரோனை வாழ்த்தி பிரான்ஸ் "எங்கள் மிக நெருங்கிய மற்றும் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒன்று" என்று கூறினார்.
"பிரான்ஸின் அதிபராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இம்மானுவேல் மக்ரோனுக்கு வாழ்த்துக்கள். பிரான்ஸ் எங்களின் மிக நெருங்கிய மற்றும் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒன்றாகும். எங்கள் இரு நாடுகள் மட்டுமல்லாத, உலகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்," என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்வீட் செய்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா மற்றும் பிரான்சில் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இருந்து, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவது, நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் " என கூறினார்.
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்ரோனை வாழ்த்திய பல உலகத் தலைவர்களில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ஒருவர்.
முன்னதாக, அதிபர் தேர்தலின் ஒரு பகுதியாக புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் புதுவை மற்றும் சென்னையில் 4 ஆயிரத்து 500 மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR