இங்கிலாந்தின் க்ளவென்டன் நகரில், 90 வயது பாட்டியின் உயிரை எதிர்பார விதமாக வீட்டிற்கு பாய்ந்த கார் பறித்தது!
இங்கிலாந்தின் க்ளவென்டன் நகரை சேர்ந்தவர் ஜோன் வூடியர்(90). கடந்த புதன் அன்று இவர் தனது வீட்டிற்கு வெளிப் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து செய்திதாள் படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த கார் எதிர்பார விதமாக அவரை நோக்கி சென்றது., அவரையும் தாண்டி வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் வூடியர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார், கொலையாளிகள் தப்பியுள்ளனர். இச்சம்பவம் முழுவதும் அருகில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது.
வாகனத்தினை ஒட்டியவர் 34, 35 வயதுக்கொண்ட தம்பதியர் எனவும், இச்சம்பவம் தொடர்பாக இருவரையும் தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வூடியர்., கடந்த 35 ஆண்டுகளாக தனியாக இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ ஆயுத கிடங்கில் பணிபுரிந்தவர் எனவும் அவரது 57-வயது மகன் ஆலன் தெரிவித்துள்ளார்.
வூடியரை கொல்வதற்கான சதிதிட்டங்கள் ஏதும் இல்லை எனவும், இச்சம்பவம் விபத்தாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் எனவும் ஆலன் தெரிவித்துள்ளார்.