சேலம் பெரியார் பல்கலை., மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலை., -க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார்.
தமிழகத்தின் துணை முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளர்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் சாமி தரிசனம். pic.twitter.com/XWPuhTn9Wc
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை திருச்சியில் வரவேற்க வந்த நபர் ஒருவர் கத்தியோடு பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் வைத்துள்ளதாகவும், ஓபிஎஸ் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்த. அப்போது அவரின் இடுப்பில் இருந்து மறைத்து வைத்திருந்த கத்தி திடீரென கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மூன்று ஆண்டுக் காலத்தில் இந்தியாவில் லாபம் ஈட்டும் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம், அடுத்த நிதி ஆண்டுக்குள் 72,500 கோடி ரூபாய் திரட்டுவதற்கான தீவிர முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு இருக்கின்றது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. அதனை தொடர்ந்து போபால்(மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம்(ஆந்திர பிரதேசம்), சூரத்(குஜராத்), மைசூரு(கர்நாடகம்), திருச்சி(தமிழ்நாடு), டெல்லி, நவிமும்பை(மகாராட்டிரா), திருப்பதி(ஆந்திர பிரதேசம்), வதோதரா(குஜராத்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி அருகே மணப்பாறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மெரினா, அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் ஆங்காங்கே உடல் சிதறிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். வெடிமருந்து வெடித்து தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிலர் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து கிடந்தது. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.