நீட் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளிவந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று துவங்கி உள்ளது.
நீட் தேர்விலிருந்து விளக்குக் கோரி தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர சட்டத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லுரிகளில் மொத்தம் 2,900 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன.
மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், (656) மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா இரண்டாவது இடத்தையும், திருச்சியை சேர்ந்த சையத் அபி்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 17-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சகம், நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு கொண்டுவரும் சட்ட முன்வடிவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த செய்தி வெளியானதும் நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறி உள்ளார்'
"நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும். ஒரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்?"
என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை திமுக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள ‘குதிரை பேர’ ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்பதற்கு இன்று நடைபெற்றுள்ள சம்பவமே தெளிவான சாட்சியமாக அமைந்திருக்கின்றது.
நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 25) காலை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்பிறகு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவை அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர்:
மருத்துவ படிப்புக்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராந்திய மொழிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் நீட் தேர்வு எழுத அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்னைகள் நீங்கப்படும்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய திமுகவினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக சார்பில் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வருகிற 12- ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
மருத்துவப் படிப்பில் சேர என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது.
11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேசியப் பொது நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற செய்து சோதனை செய்தார்கள். இது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சோதனைகளை தென்மாநிலங்களில் மட்டுமே மத்திய கல்வி வாரியம் செயல்படுத்தி வருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.