உங்க வீட்டில் கீச்.. கீச்.. கேட்கிறதா?: இன்று உலக சிட்டுக்குருவி தினம்!

அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று சிட்டுக்குருவி. அப்படிபட்ட பறவைக்கான தினம்தான் இன்று! 

Last Updated : Mar 20, 2018, 12:16 PM IST
உங்க வீட்டில் கீச்.. கீச்.. கேட்கிறதா?: இன்று உலக சிட்டுக்குருவி தினம்!  title=

அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று சிட்டுக்குருவி. அப்படிபட்ட பறவைக்கான தினம்தான் இன்று! 

நம் வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால் நீங்களும் இந்த கீச்... கீச்... சத்தத்தை கேட்டிருப்பீர்கள். இந்த கீச்... கீச்... என்ற ஓசையின் இனிமையைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு மென்மையான உடலின் அழகை நீங்கள் ரசிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

குறு குறு என அங்கும் இங்கும் நொடிக்கொரு முறை நோட்டமிடும் அந்தக் கண்களையும், குதித்து குதித்து சிறுதானியங்களை கொத்தித் திண்ணும் அந்த அழகை நம் கண்களால் காணும் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளின் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் வெள்ளை நிறம் கூட அதற்குத் தனி அழகுதான்.

அப்படிப்பட்ட அழகுடைய பறவைக்கான தினம்தான இன்று. அழிவின் விளிம்பில் இருந்து வரும் பறவை இனமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் தான் நாம் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன.

பறவை இனங்களிலேயே மிகச் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை புழுக்களை உண்டு வாழ்வதால், சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக இருந்தது. பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும். 

அதே போல, நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும், அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் 'பேக்' செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது. 

நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைபேசியின் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலை உருவாகியுள்ளது. சிட்டுக் குருவிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிய, நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடினால் மட்டும் போதுமா?..

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அவை வழக்கம்போல் வாழ்வதும், அத்தோடு கிராமங்களிலும், சிறுநகராட்சிகளிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் ஆங்காங்கே நடத்தப்படும் குறுகிய ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சிட்டுக்குருவிகள் பற்றிய முழுமையான ஆய்வறிக்கை இதுவரை இந்தியளவில் வெளியிடப்படவில்லை. உலகளவில் இன்று 54 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்கின்றனர். பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவையாகக் கூறுகிறார்கள் என்பதும் பெரிய குழப்பத்தில் உள்ளது. 

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க என்ன செய்யலாம்..! 

தற்போது நாம் அனைவரும் அதிகமாக அலைபேசிகளை உபயோகிக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதற்கான அலைபேசியின் போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சு போன்றவற்றால் அவை பாதிக்கின்றது. உங்களால்  முடிந்த வரை நீங்கள் உங்கள் தெருக்களில் அதிகமாக மரங்களை வளர்ப்பதும், பிளாஸ்டிக் பொறுக்கல் உபயோகிப்பதை தவிர்த்தால் ஓரளவிற்கு அவற்ற்றை நமால் பாதுகாக்க முடியும்...! 

Trending News