Poco M6 5G, Flipkart: இந்தியாவில் 5ஜி இணைய சேவை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஐியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகின்றன, கூடிய விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டும் போதும்.
இந்தியாவின் விலை குறைந்த 5ஜி மொபைல்
எனவே, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கி உள்ளன. மேலும், பல ஸ்மார்ட்போன்கள் ரூ.10 ஆயிரத்திற்கும் மேலான விலைகளில் கிடைக்கிறது. புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் அனைவரும் தற்போது 5ஜி மொபைல்களையே கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இந்தியாவில் விலை குறைந்த 5ஜி ஸ்மார்ட்போன் இன்னும் சில நாள்களில் சந்தைக்கு வர உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் நினைக்கும் அனைவரும் இதனை கொஞ்சம் பார்க்கவும். Poco நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் Poco M6 மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் வரும் மார்ச் 10ஆம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில், இந்தியாவின் விலை குறைந்த மொபைல் என அந்நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Flipkart: நிமிடத்தில் பிளிப்கார்ட் யுபிஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஏர்டெல் உடன் பார்ட்னர்ஷிப்
பெரிய டிஸ்பிளே, விரைவான பிரஸஸர், பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங், அருமையான புகைப்படங்களை எடுக்கவல்ல சிறந்த கேமரா கொண்ட Poco M6 மொபைல் வரும் மார்ச் 10ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைலின் விலை 8 ஆயிரத்து 799 ஆகும். 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பதால், இந்தியாவில் விலை குறைந்த 5ஜி மொபைல் என இதனை அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.
மேலும், தற்போது Poco நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. இதன்மூலம், Poco M6 மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தரப்பில் டேட்டா பலன்கள் காத்திருக்கிறு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் Poco M6 மொபைலை வாங்கினால் அவர்களுக்கு கூடுதல் டேட்டா கிடைக்கும்.
அந்த வகையில், Poco M6 மொபைல்களை வாங்குபவர்களுக்கு ஒன்டைம் 50ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஏர்டெல் வாடிக்கையாளராக இல்லாவதவர்களுக்கு வீட்டிற்கே வந்து சிம் டெலிவரி செய்யும் வசதியையும் வழங்குகின்றனர். மேலும், அந்த சிம்மிற்கும் 50ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.
Poco M6 5G: சிறப்பம்சங்கள்
8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வரும் Poco M6 5G மொபைல் 6.74 இன்ச் HD+ டிப்பிளே உடன் வருகிறது. இதில் MediaTek Dimensity 6100+ பிராஸஸர் உடன் இந்த மொபைல் வருகிறது. MIUI 14 உடன் ஆண்ட்ராய்ட் 13இல் இந்த மொபைல் இயங்குகிறது. 50MP பின்புற கேமரா, 5MP முன்புற கேமரா ஆகியவையும் உள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்கும் இதில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ