39 கோடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு!

இன்று 39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2021, 03:35 PM IST
39 கோடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு! title=

சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள்  முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டமன்றப் பேரவை விதி எண்110-ன் கீழ் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், 24.08.2021 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கான திட்ட மதிப்பீடு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழக பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள கருணாநிதி நினைவிடத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாராக உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார்.

ALSO READ |  கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

அதன்படி, இன்று 39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

திமுக அறக்கட்டளை பணத்திலிருந்து முன்னாள் முதலவர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட வேண்டியதுதானே? என தமிழக பாஜக எச். ராஜா கேள்வி எழுப்பியிருந்தார். 

ALSO READ |  பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி

Karunanidhi Memorial

கருணாநிதிக்கு நினைவிடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News