Tamil Nadu Government Export Business Free Training | ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருந்து, அதனை எப்படி செய்வது என தெரியாமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்றுமதி தொழில் குறித்த அனைத்து விவரங்களும் நிபுணர்கள் மூலம் விரிவாக தெரிவிக்கப்படும். ஏற்றுமதி தொழில் எப்படி செய்யலாம், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? என அனைத்து விவரங்களும் அரசு சார்பில் தெரிவிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள அரசு நிர்ணயித்திருக்கும் ஒரே ஒரு வரம்பு என்னவென்றால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 28.12.2024 முதல் 28.12.2024 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு கரூர் மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெறும். இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள். சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள். அந்திய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.edith.h என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 99943 22859 / 9080609808. இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். WWww.editn.n என்ற வலைதளத்தில் முன்பதிவு அவசியம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ