Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணிநேரங்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகளின் மேல் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். குறிப்பாக, ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியின் மீது அதிக கவனமும் உள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 மக்களவை தொகுதியில் 31ஆவது தொகுதிதான் சிவகங்கை. இந்த தொகுதி இம்முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்பட்டது. பாஜக மற்றும் அதிமுகவும் இந்த தொகுதியை கைப்பற்ற முட்டிமோதியது. சிவகங்கை மக்களவை தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதியில் இதுவரை 8 முறை காங்கிரஸ் கட்சியும், தலா இரண்டு முறை திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் வென்றன எனலாம். குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்த தொகுதியில் இருந்து காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 7 முறை தேர்வாகி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள்: 8 லட்சத்து 2 ஆயிரத்து 283 பேர்
பெண் வாக்காளர்கள்: 8 லட்சத்து 31 ஆயிரத்து 511 பேர்
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 63 பேர்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 பேர்
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?
கடந்த 2019 மக்களவை தேர்தல் - ஒரு பார்வை
கடந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்றார். அதன் வாக்கு சதவீதம் 52.22% ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட் பாஜகவின் ஹெச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 வாக்குகளை மட்டும் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து, அமமுக வேட்பாளர் பாண்டி 1 லட்சத்து 22 ஆயிரத்து 534 வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக அங்கு போட்டியிட்ட கவிஞர் சினேகன் வெறும் 22 ஆயிரத்து 931 வாக்குகளை மட்டுமே பெற்று, ஐந்தாவது இடத்தையே பிடித்தார். இது நாம் தமிழர் கட்சியை விட குறைவாகும். கார்த்தி சிதம்பரம் 2014ஆம் ஆண்டில் இங்கு போட்டியிட்டு பாஜகவின் ஹெச்.ராஜாவை விட குறைவான வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தைதான் பிடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2024 வேட்பாளர்கள் யார் யார்?
2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 6 பேர் கட்சி சார்ந்த வேட்பாளர்கள், 13 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார். இதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பாஜகவின் தாமரை சின்னத்தில் தமிழக மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன், அதிமுகவின் சேவியர் தாஸ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆகும்.
பதிவான வாக்குகள்
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் 64.26% வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 887 வாக்குகள் பதிவாகின.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
சிவகங்கை தொன்றுதோட்டு காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட தொகுதியாகும். எனவே, அந்த பாரம்பரியத்தை இம்முறையும் கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பாஜகவுக்கு அங்கு ஓரளவுக்கு வாக்கு வங்கியும் இருக்கிறது. இருப்பினும், அதிமுக தனித்து போட்டியிடுவதால் திமுக கூட்டணி எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் என்பதால் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ