பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் நேற்று அறிவித்தார். அத்துடன், தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன் என்று அறிவித்தார். தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஒளி அறக்கட்டளை துவக்க விழாவை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடியிடம் " காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
I have taken the decision with heavy heart to resign from TNBJP for not giving opportunity for an enquiry, equal rights & respect for women. Under Annamalai leadership women are not safe. I feel better to be trolled as an outsider.
.@narendramodi .@AmitShah @JPNadda @blsanthosh(@Gayathri_R_) January 2, 2023
அதற்கு அமைச்சர், “பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள். காயத்ரி ரகுராமுக்கும் அதேதான். எங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளும். எங்கள் முதல்வரும் ஏற்றுக்கொள்வார்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாஜகவிலிருந்து விலகிய சரவணன்; அதிமுகவில் இணைந்தார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ