டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 30-ம் தேதி, விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால் அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 30-ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.