புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
ஓட்டுநர், பயணிகள் மற்றும் வாகன உரிமையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வரை இந்த Bumper-to-bumper Insurance காப்பீட்டு திட்டத்தை நீடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பாக, தமிழக அரசு செப்டெம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ALSO READ | Top 7 Mid Size SUV: உங்கள் பட்ஜெட்டுக்குள் கச்சிதமாய் பொருந்தும் அட்டகாசமான கார்கள்!!
2016 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஒகேனக்கல் பகுதியில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சடை அப்பன் என்பவர் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர், ஈரோட்டில் உள்ள வாகன விபத்து இழப்பு காப்பீட்டு தீர்பாயத்தில் வழக்க்கு தொடங்கியதில், அவர்களுக்கு 14,65,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இதில் காப்பீட்டு நிறுவனத்தின் வாகன காப்பீட்டு பாலிசி ஒரு 'சட்டக் பாலிஸி' மட்டுமே என்று வாதிட்டது. அதாவது இந்த பாதுகாப்பு மூன்றாம் தரப்பினரால் வாகனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும், வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அல்ல என வாதிட்டது.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படுவதால், தமிழகத்தில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிற்கும் அதிக பாதுகாப்பு கிடைக்கும். இந்த உத்தரவு, காரின் உரிமையாளரிடமிருந்து இறப்புகான இழப்பீடு கோருவதை தடுக்காது என்றும் நீதிபதி வைத்தியநாதன் தெளிவுபடுத்தினார்.
ALSO READ: Google, Amazon, Facebook-க்கு அதிர்ச்சி: புதிய கட்டண தளத்துக்கு தடை விதித்தது RBI
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR