ஆறுமுகசாமி ஆணைய பதவிக்காலம் 4 மாதம் நீட்டிப்பு!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிப்பு!!

Last Updated : Jun 21, 2018, 03:41 PM IST
ஆறுமுகசாமி ஆணைய பதவிக்காலம் 4 மாதம் நீட்டிப்பு! title=

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிப்பு!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30-க்கம் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி ஜூன் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

 

Trending News