பழைய மொபைல் மூலம் கோஹ்லியின் படத்தை உருவாக்கிய ரசிகர்; ஆட்டோகிராப் போட்ட விராட்

ரசிகர் ஒருவர் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஒரு படத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 5, 2020, 12:53 PM IST
பழைய மொபைல் மூலம் கோஹ்லியின் படத்தை உருவாக்கிய ரசிகர்; ஆட்டோகிராப் போட்ட விராட் title=

புது டெல்லி: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 சர்வதேச தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, ரசிகர் ஒருவர் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஒரு படத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது பழைய மொபைல் போன்கள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.

ராகுல் பரேக் என்ற இந்த ரசிகர் மொபைல் போன்கள் மற்றும் கம்பி மற்றும் வயர்களைப் பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த உருவப்படத்தை உருவாக்க அவருக்கு மூன்று நாட்கள் ஆனது. அந்த படத்தை பார்த்த விராட் கோஹ்லி மிகவும் ஈர்க்கப்பட்டு அவருக்கு ஆட்டோகிராப் கொடுத்தார்.

கோஹ்லிக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உரையாடலின் வீடியோவை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பகிர்ந்துள்ளது.

 

இந்த வீடியோவில், ரசிகர் கூறுகிறார், 'நான் இந்த படத்தை பழைய மொபைல் போன்கள் மற்றும் கம்பிகளிலிருந்து உருவாக்கியுள்ளேன். அதை உருவாக்க நான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்தேன். கோஹ்லி சார் எனக்கு ஆட்டோகிராப் கொடுத்துள்ளார். அவர் என்னைப் பார்க்க வந்தபோது, ​​என் இதய துடிப்பு அதிகரித்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட கோஹ்லி குவாஹாட்டிக்கு வரலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிந்தேன் எனக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டி அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Trending News