துபாய்: ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்துக் கொள்ள துபாய்க்கு சென்றிருக்கும் கிரிக்கெட்டர் ரோஹித் ஷர்மாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், 2022 ஆசிய கோப்பைக்கான துபாயில் பயிற்சி அமர்வு முடிந்ததும் ரோஹித் சர்மா ஸ்கூட்டர் ஓட்டுவதைக் காணலாம். 2022 ஆசியக் கோப்பைக்கான துபாயில் பயிற்சி அமர்வு முடிந்ததும், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஸ்கூட்டர் ஓட்டும் ஒரு சிறிய வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை பகிர்ந்துள்ளது. வீடியோவில், நட்சத்திர பேட்டர் ஸ்கூட்டர் சவாரியை ரசிப்பது தெரிகிறது. அவர் அந்த ஸ்குகுட்டரில் மைதானம் முழுவதும் சுற்றி வருகிறார்.
பல கிரிக்கெட் ரசிகர்கள் ஹிட்மேன் ரோஹித் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வீடியோவை தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்களில் ஒருவர் வீடியோவிற்கு வித்தியாசமான பார்வையை அளித்து, வீடியோவில் "மேரே ஜீவன் சாத்தி" திரைப்படத்தின் "சல ஜாதா ஹூன் கிசி கி தூன் மே" பாடலைச் சேர்த்து தனது சொந்த ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | Asia Cup2022: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் டாப் 3 சம்பவம்
அந்த வீடியோவிற்கு, ”ஹிட் மேன் @ImRo45 ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டே இந்த அழகான பாடலைக் கேட்பது சுகம்” என்று தலைப்பிட்டு, #Chlajatahu #RohitSharma #BCCI #AsiaCup2022 என பலரை டேக் செய்திருக்கிறார். வைரலாகும் ரோஹித் ஷர்மாவின் வீடியோ இது...
Hit driving scooter and listening this beautiful song #Chlajatahu #RohitSharma #BCCI #AsiaCup2022 pic.twitter.com/vLIvPZBHOt
— Bhupendra Singh Chauhan (@bhupen87112944) August 25, 2022
ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்க உள்ள 15-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணியினர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.. அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள். இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் மீண்டும் களமிறங்குவார்.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
ரோஹித் ஷர்மாவின் தலைமையில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் வெற்றியை இந்தியா கைப்பற்றியது மற்றும் தொடரின் 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இப்போது, இந்திய அணி, ஆசிய கோப்பை 2022 இல் கோப்பையை வெல்வதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிய கோப்பை போட்டிகள், டி20 முறையில் நடைபெறும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என 6 அணிகள் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ