IPL 2023 MI vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இன்று (ஏப். 16) மாலை நடைபெற்ற இப்போட்டியில், மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது.
தொடர்ந்து கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் சதம் அடித்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 104 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில், ரஸ்ஸல் சற்று அதிரடி காட்டினார்.
இதனால், அந்த அணி 20 ஓவர்களுக்கு 185 ரன்களை குவித்தது. சோகீன் 2 விக்கெட்டுகளையும், கிரீன், யான்சன், பியூஷ் சாவ்லா, ரிலே மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் 2 ஓவர்களை மட்டும் வீசி 17 ரன்களை கொடுத்தார்.
இந்த போட்டியில், கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா நான்காவது வீரராக களமிறங்கினார். கடந்த போட்டியில் அதிரடி காட்டியதை போன்று இந்த போட்டியிலும் விளையாட வேண்டிய கட்டாயத்துடன் வந்தார் எனலாம். எனினும், இந்த போட்டியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் சோகீன் வீசிய 9ஆவது ஓவரில் 5(10) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில், லாங் ஆன் திசையில் தூக்கியடித்து மாற்று வீரராக களத்தில் இருந்த ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார்.
நிதிஷ் ராணா சற்று ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடக்க ஆரம்பித்தபோது, பந்துவீச்சாளர் சோகீனுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ராணா - சோகீன் இருவரையும் சக வீரர்கள் சமாதனப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, ராணா பெவிலியனுக்கு மீண்டும் நடக்க தொடங்கினார்.
Shameless behaviour from Hrithik Shokeen & no doubt their captain is Rohit Sharma Well done Rana for replying him brutally pic.twitter.com/zphStpHqg0
— Sohel (@SohelVkf) April 16, 2023
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஹிருத்திக் சோகீன், ராணாவை பார்த்து சைகையில் கூறுவதை அடுத்து, நிதிஷ் ராணா ஆவேசமடைந்தது தெரிந்தது. சூர்யகுமார் யாதவ் அதில் இடையிட்டு, நிதிஷ் ராணாவை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில், நிதிஷ் ராணா, சோகீன் ஆகியோருக்கு இடையே ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், ராணா, சோகீன் இருவரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவர்கள் எனவும், அவர்கள் ஓய்வறையில் கூட பேசிக்கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சி தொடரில் அவர் பேட்டிங் செய்யும்போதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என அதில் குறிப்பட்டுள்ளார்.
மேலும், சோகீன் இளம் வீரர் என்ற நிலையில், தனது அணியின் கேப்டனும், மூத்த வீரருமான நிதிஷ் ராணாவிடம் இப்படி நடந்துகொள்வது சரியல்ல எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | IPL 2023: யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் ப்ரீத்தி ஜிந்தா - கலாய்த்த குஜராத் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ