புதுடெல்லி: சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான அணி, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் பலபரிட்சை மேற்கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் திரும்புவதைக் குறிக்கும் முதல் போட்டி இது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியா சமீபத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றது.
Also Read | IND vs Eng: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
அந்நிய மண்ணில் பெற்ற வெற்றியை சொந்த மண்ணிலும் பதிவு செய்யும் ஊக்கத்துடன் இந்திய அணி களத்தில் இறங்கும். மறுபுறம், ஜோ ரூட் & கோ, இலங்கைக்கு எதிராக தொடர் வெற்றியை பதிவு செய்து, அண்டை நாட்டிலும் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருப்பார்கள்.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது இறுதிப் போட்டியை முடிவு செய்யும் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாகும். இந்தத் தொடரை வெல்லும் அணி, 2021 ஜூன் மாதத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) அன்று, இந்திய நேரப்படி, காலை 09:30 மணிக்கு தொடங்கும்.
Also Read | IND v ENG 1st Test: சென்னை மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் கேப்டன் விராட் கோலி
போட்டி நடைபெறும் அரங்கத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடியாக ஒளிபரப்புகிறது. அதில் கண்டு ரசிக்கலாம்.
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்டை ஆன்லைனிலும் மொபைலிலும் பார்க்கலாம். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நேரடி வர்ணனை, ஸ்கோர்கார்டு மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகளை https://www.hindustantimes.com/cricket என்ற ஆன்லைன் லிங்கில் கண்டு ரசிக்கலாம்.
ALSO READ: கால்பந்து நட்சத்திரம் Neymar, பாரிஸ் செயிண்ட்டுடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பது ஏன்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR